Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை கருவி பயன்பாட்டுக்கு வந்தது

பயணிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை (Baggage Scanner) கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவியை, திருச்சி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திறந்து வைத்தார்.
பயணிகளின் உடைமைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிசோதிப்பதுடன், வெடிகுண்டு உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை கண்டறிவதற்கும் இந்த புதிய கருவி உதவிகரமாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ரயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்