திருச்சி இ.பி. ரோடு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கார்த்தி மற்றும் கணேசன் பாண்டியன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய சோதனையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம், ஒரு மடிக்கணினி, ஒரு டேப்லெட் மற்றும் பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தரப்பினரின் தகவலின்படி, திருச்சியில் அண்மைக் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய போதை மாத்திரை தொகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் பின்னணி, போதை மாத்திரைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.