Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

இறுதி ஊர்வல தகராறு கொலையில் முடிவு… நண்பரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது

திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமாக மாறியுள்ளது.
காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ரஹ்மான் பக்ருதீன் கபூர் (25), உறவினரான ரபீக் (40) உடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ரபீக் மரக்கட்டையால் தாக்கியதில் ரஹ்மான் பக்ருதீன் கபூர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர்போர்ட் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரபீக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்