திருச்சி சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (42), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். பழைய ஆட்டோ அடிக்கடி பழுதாகி வந்ததால் புதிய ஆட்டோ வாங்க விரும்பியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செந்தில்குமாரின் மனைவி லதா அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.