Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது; புகையிலை விற்றவரும் சிக்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய சோதனையில், பாலக்கரை ரயில்வே கேட் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக எடத்தெரு சுலைமான் தெருவைச் சேர்ந்த சச்சின் (23) மற்றும் பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த அப்பு (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 17 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், செசன்ஸ் கோர்ட் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக திருவரம்பூர் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (54) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்