Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருமணமான எட்டு மாதத்தில் இளைஞர் உயிரிழப்பு…

பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் திருமணமாகி எட்டு மாதங்களே ஆன நிலையில் 21 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் பகுதியைச் சேர்ந்த அசோக், பெட்டவாய்த்தலை ஜே.ஜே. நகரைச் சேர்ந்த கஸ்தூரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் பெட்டவாய்த்தலையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீப காலமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதையடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அசோக் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்