திருச்சி மஞ்சள் திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன் (50) என்பதையும், அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதையும் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் குடும்பத்தினருடன் வசிக்கவில்லை என்றும், மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த தனியார் ஹோட்டல் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கரை பகுதியை சேர்ந்த நாகராஜ் (43), கடந்த பல ஆண்டுகளாக தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக தகவல்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே பரிதாபம் :
அதவத்தூர் வாலிபர் தீக்குளித்து தற்கொலை மது குடிக்க பணம் கிடைக்காததால் விபரீத முடிவு
திருச்சி ஜூலை 2 –
திருச்சி சோமரசம்பேட்டை
அதவத்தூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34)
மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அவ்வப்போது மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
வழக்கம்போல் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து வெளியே சென்றார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த குமார் யாரும் எதிர்பாராத வகையில்
தின்னரை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் உடல் முழுவதும் வெந்து அலறி துடித்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் குமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சிவப்பிரியா சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் இல்லாததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் கஞ்சா விற்ற
இரண்டு பேர் கைது
திருச்சி ஜூலை 2-
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர் அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி நந்தினி 51 என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பர்முதல் செய்யப்பட்டது.
இதேபோன்று திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை தீரன் நகர் அருகே கஞ்சா விற்ற அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் 28 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து அவரை ஜாமினில் விடுவித்தனர்
திருச்சி பாலக்கரையில்
ஹோட்டல் ஊழியர்
திடீர் சாவு
திருச்சி ஜூலை 2
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த தனியார் ஹோட்டல் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கரை பகுதியை சேர்ந்த நாகராஜ் (43), கடந்த பல ஆண்டுகளாக தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாநகரில்
புகையிலை விற்ற
மூன்று பேர் கைது
திருச்சி ஜூலை 2-
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை நடத்தி புகையிலை விற்றவர்களை கைது செய்தனர்.
திருச்சி கோரை ஆறு அருகே புகையிலை விற்ற திருச்சி பெரிய மிளகுபாறை புதுத் தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 42 )என்பவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 10 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி குட்டிமலை சாலை அருகே புகையிலை விற்ற
கிராப்பட்டி பாரதிநகரை சேர்ந்த ஆறுமுகா கனி 39 என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பொன்மலை அஞ்சல் அலுவலக சாலை அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் 24 என்ற வாலிபரை பொன்மலை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாநகரில்
போதை மாத்திரைகள்
விற்ற 7 பேர் கைது
திருச்சி ஜூலை 2-
திருச்சி மாநகரில்
போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் மற்றும் வாலிபர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மாநகரம் முழுவதும் நேற்று அதிரடி போதை மாத்திரை வேட்டை நடந்தது.
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி அரியமங்கலம் அருகே போதை மாத்திரை பயன்பாடு உள்ளதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது போதை மாத்திரை வைத்திருந்த திருச்சி அரியமங்கலம் சவுக்கத் அலி நகரை சேர்ந்த ஷானவாஸ் ஹுசைன் 24 என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் ஒரு மருத்துவ ஊசி ஒரு வாட்டர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த
அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் 20
அரவிந்த் குமார் 21 ஆகிய இரண்டு வாலிபர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர்களிடமிருந்து
10 போதை மாத்திரை கள், இரண்டு மருத்துவ ஊசி, பாட்டில், பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மதுரை சாலை ராமகிருஷ்ணா பாலம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த
பெரிய கடைவீதி பெரிய கம்மாளர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் 28 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மருத்துவ ஊசி பறிமுதல் செய்யப்பட்டது
காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் 24 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் 4 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி வாழைக்காய் மண்டி கிருஷ்ணாபுரம் சாலை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாராநல்லூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் 26 மேல தேவதானம் பகுதியை சேர்ந்த மதன்குமார் 25 ஆகிய இரு வாலிபர்களை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 245 போதை மாத்திரைகள் நான்கு மருத்துவ ஊசிகள் இரண்டு வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஒரு அருவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில்
வியாபாரியை மிரட்டிய
ரவுடி அதிரடியாக கைது
திருச்சி ஜூலை 2-
திருச்சியில் இளநீர் கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருச்சி பீமநகர் மேல கரிகார தெருவை சேர்ந்தவர் ஜாபருல்லா 61, இளநீர் கடை வைத்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி அப்பகுதியை சேர்ந்த மர்ம வாலிபர் ஒருவர் ஜாபருல்லாவிடம் செலவிற்கு பணம் கேட்டார் அவர் கொடுக்க மறுக்கவே அந்த வாலிபர் ஜாபர் லாவை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சித்திக் 21 என்ற சரித்திர பதிவேடு ரவுடி வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு:
குற்றவாளிகள் மீது
கடும் நடவடிக்கை
திருச்சி எஸ்.பி.யிடம் மனைவி, மகன் கண்ணீர் புகார்
திருச்சி ஜுலை 2-
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர் இன்று தனது மகன் புவனேஸ்வருடன்
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவருக்கும் எங்களுக்கும் பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்தது பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயர் நீதிமன்றம் மூலம் உரிமையை பெற்று அனுபவித்து வந்தோம் இந்த முன் விரோதத்தில் அந்த நபர் மற்றும் அவரது மகன் மனைவி மருமகன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி
எனது மூத்த மகன் வீட்டிலிருந்து வெளியே வந்த போது வழிமறித்து பிரச்சனை செய்தனர் இதனை தட்டி கேட்ட எனது தலையில் கல்லால் தாக்கினர்
இது தொடர்பாக புகார் அளிக்க எனது கணவர் வேல்முருகன் மற்றும் இளைய மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே புகார் மனுவை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது நான்கு பேர் கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டி
கொலை செய்ய முயன்றனர். ஆனால் இந்த வழக் இல் ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர் கொலை வெறி தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் கைது செய்யாமல் உள்ளனர் ஆகவே சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்
திருச்சியில் இன்று பரபரப்பு
ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய
பில் கலெக்டர் கைது
லஞ்ச ஒழிப்புத் தறையினர் நடவடிக்கை
திருச்சி ஜூலை 2-
திருச்சி மாநகராட்சிபொன்மலை கோட்ட அலுவலகத்தில்
பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி(வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த
சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக அணுகினார்.
அப்போது பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ
5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று பொறிவைப்பு நடவடிக்கை மூலமாக அவரை கைது செய்தனர்.
பின்னர் ரசாயனம் தடவிய
ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை
சக்தி கணபதியிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் அதனை சக்தி கணபதி, பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டரிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இந்த சம்பவம் பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
சமயபுரம் அருகே இன்று
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இளம் பெண் -வாலிபர் பலி
திருச்சி ஜூலை 2
திருச்சி லால்குடி அன்பில் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 34).
இவர் மணச்சநல்லூர் நொச்சியம் பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் செந்துரியா (27) என்பவரை
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து நம்பர் ஒன் டோல்கேட் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
செந்துரியாவை வேலைக்கு செல்லும் வழியில் அவரது வீட்டில் இறக்கி விட்டு வட்டு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இவர்கள் செம்பழனி பகுதியில் வந்த போது எதிரே வந்த காருடன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அஜித் மற்றும் செந்துரியா ஆகிய இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு செல்லும் வழியிலேயே இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னாள் சென்ற வாகனத்தை அஜித்குமார் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இது பற்றி சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கார் மோதி இளம் பெண் மற்றும் வாலிபர் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Comments are closed, but trackbacks and pingbacks are open.