Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பொன்மலைப்பட்டியில் சோகம்

திருச்சி, ஜூலை 18:
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 3 வயது குழந்தை கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ரூபனின் மகன் விஜோ ஜாய் (3), இன்று அதிகாலை தனது பாட்டி வழக்கம்போல் ஆலயத்துக்கு செல்வதை பார்த்து, வீட்டிலிருந்து தனியாக ஓடி சாலையை நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியர் காணிக்கை ராஜ் தனது காரை வீட்டிலிருந்து வெளியே எடுத்து வந்து, ஆலயம் அருகே நிறுத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக குழந்தை மீது கார் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை உடனடியாக அருகிலிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்த கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்