Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 18:
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், புள்ளம்பாடி அண்ணா திடலில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் டி.என். சிவக்குமார், லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா. வளர்மதி, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், பழனி கோவில் நிலம் தொடர்பான விவகாரம் மற்றும் சமீபத்திய குற்றச்சம்பவங்கள் குறித்து தமிழக அரசை விமர்சித்தார்.
மேலும், பழனி கோவில் நிலம் தொடர்பான முறைகேடு குறித்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்