திருச்சி மாநகரில் திருமண ஏற்பாடுகளின் போது மாப்பிள்ளை குறித்து விசாரித்தபோது கூறப்பட்ட தகவலைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீரங்கிக்குளம் தெருவைச் சேர்ந்த பிலாலின் சகோதரிக்கு, சமஸ்பிரான் தெருவைச் சேர்ந்த ஜாபருடன் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமணம் தொடர்பாக ஜாபர் குறித்து அவரது நண்பரான யாசரிடம் விசாரிக்கப்பட்டபோது, ஜாபர் குறித்து சில தகவல்கள் கூறப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில், யாசரை ஓயாமேரி சுடுகாடு அருகே அழைத்துச் சென்று பிலால், ஜாபர், சதாம் மற்றும் சிலர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் யாசரின் தாடை முறிந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாசர் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் பிலால், ஜாபர் மற்றும் சதாம் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.