திருச்சி, நவம்பர் 6:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சோதனையானது, மணல் கொள்ளை தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளராகப் பணியாற்றும் சாதிக் பாஷா என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் கொள்ளை தொடர்பான பழைய வழக்கில் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் அல்லது பிற பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ விளக்கமும் எதிர்பார்க்கப்படுகிறது.
T NEWS TAMIL – திருச்சி
Comments are closed, but trackbacks and pingbacks are open.