திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா அவர்களின் ஆணைக்கிணங்க, 119-வது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி, திருச்சி மாவட்ட தலைவர் டேவிட் செல்வராஜ் தலைமையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேவர் பெருமகனாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தேவர் ஜெயந்தியின் முக்கியத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நில முதலீட்டு ஆலோசகர் ரூபன் கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சக்திவேல், ராணி விலாஸ் ஸ்நாக்ஸ் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், காட்டூர் கிளை சங்க தலைவர் சாமுவேல் ராஜ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சிவகோபிநாத், கௌரவத் தலைவர்கள் ராஜேந்திரன், ஆலோசகர் மணி, அமைப்புச் செயலாளர் நாகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜங்ஷன் பகுதி தலைவர் டிபன்கடை ராஜ், செயலாளர் ஜுவா, பொருளாளர் பிரவீன், துணைச் செயலாளர் அருண், கிராப்பட்டி சங்க துணைத் தலைவர் சங்கர் குமார், வழக்கறிஞர் சந்திரபோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவர் பெருமகனாருக்கு மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள், வணிகர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.