எனக்கு வாழ பிடிக்கலை.. என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர். தற்கொலை கடிதத்தில் ராமாபுரம் இளைஞர்
சென்னை: தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என சென்னை ராமாபுரத்தில் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை ராமாபுரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அர்ஜூன் (23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார்.3-வது அலை.. இந்தியாவில் 3 மெட்ரோ நகரங்களிலிருந்து 75 சதவீத ஓமிக்ரான்.. டாஸ்க் ஃபோர்ஸ் வார்னிங்! தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் இன்று மாலை சுமார் 6 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜன்னல் வழியாகஅவரை பார்க்க் வீட்டிற்கு சென்ற நபர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது அர்ஜூன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய அர்ஜூனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வாழ பிடிக்கவில்லைஅவர் தங்கியிருந்த வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், “எனக்கு வாழ பிடிக்கலை. எல்லோரும் இருந்து நான் தனியாக இருப்பது போல் ஃபீல் பன்றேன். என்னால வாழ முடியல. என் வாழ்க்கை இப்படியே இருக்கு, அதனால தா நான சாக போறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு நான் என எழுதியுள்ளார்.கடிதத்தில் கடைசி ஆசைஎன்னுடைய கடைசி ஆசை என் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். அப்படியே எனது உடலை பெற்றோரிடம் ஒப்படையுங்கள் என எழுதி வைத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.அர்ஜூன் தூக்கிட்டு தற்கொலைமேலும் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்ததில் அர்ஜூனுக்கு சரிவர வேலை இல்லாததும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் இன்று மாலை வீட்டுக்கு வந்து சென்ற பின்னர்தான் அர்ஜூன் தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.காதல் தோல்வியால் தற்கொலையா?அர்ஜூன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது
Next Post