திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் கொரியர் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (51), திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே வளைவில் திரும்பியபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியன், முன்னால் சென்ற வாகனம் மற்றும் அருகிலிருந்த கட்டிடத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்த மேரி (60), வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தினர் கண்டு மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பணம் திருடியதாக பெண் கைது
ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆனந்தி என்ற மேரி (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் போதை ஒழிப்பு நடவடிக்கை: 9 பேர் கைது
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா, புகையிலை பொருட்கள், போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கல்லக்குடி அருகே மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தென்னை மரத்தில் காய்ந்த மட்டைகளை அகற்றியபோது தவறி விழுந்த ராஜேந்திரன் (60), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை அருகே வாலிபர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
மணப்பாறையைச் சேர்ந்த பாண்டித்துரை (24), உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.