Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் Rajiv Kumar நாளை தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியல் திருத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் 26ம் தேதி நேரடியாக ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகள் தீவிரமடையும் நிலையில், தேர்தல் ஆணையரின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்