திருச்சி உறையூரில் அதிர்ச்சி… சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மனைவியை மருத்துவமனையில் குத்திக்கொன்றதாக கணவர் மீது வழக்கு
திருச்சி உறையூர் பகுதியில் குடும்பத் தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், அங்கு மீண்டும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, வீட்டில் ஏற்பட்ட தகராறின்போது கணவர் கூர்மையான கம்பியால் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பெண்ணை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த கணவர், மீண்டும் கூர்மையான கம்பியால் தாக்கியதில் பெண் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முழு விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.