Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

*வீணாய் போகும் மக்கள் வரிப்பணம்* *பூட்டியே கிடக்கும் இலவச கழிப்பறை*

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலைய நீர்த்தேக்க தொட்டி அருகே ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் அதிக செலவில் இலவச கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக பூட்டி வைத்திருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.
இது பற்றி பயணிகள் கூறுகையில்
அதே வளாகத்திற்கு பின்புறம் கட்டணக் கழிப்பறை உள்ளதால் *தனியார் ஒப்பந்ததாரருக்கு சாதகமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும்* அதனாலேயே இதை பூட்டி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

*மக்களின் வரிப்பணத்தில்* இதுபோன்று இலவச பொது சுகாதார வளாகம் கட்டி பயன்படுத்த விடாமலும் பூட்டியே கிடப்பதாலும் *இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாக* மாறிவிட்டது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

*பயணிகள் பயன்பாட்டிற்கு வருமா இலவச கழிப்பறை…*

*நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் …*

என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்