திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், ட் திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்ற செய்தியால் கோபமடைந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை கடும் எடுக்கப்படும். இத்தகைய செயலால் தான் கூனிக் குறுகி நிற்பதாகக் கூறினார். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதாகக் கூறினார். ஆனால், சில இடங்களில் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
முதலமைச்சரின் அறிக்கையைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், முதலமைச்சரின் குறுகி நிற்கிறேன் என்ற வார்த்தையால் நாங்கள் உருகி நிற்கிறோம். விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலகவில்லை என்றாலும் பரவாயில்லை விசிக அமைதி காத்து கூட்டணி தர்மத்தைக் காப்போம் என்று கூறினார்.
நகர்ப்புற உள்ளட்சி அமைப்பு தலைமை பதவிகளில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 8 இடங்களை மட்டுமே விசிகவுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும், திமுக கூட்டணியில் விசிக பொறுமை காக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ.வுமான சிந்தனைச் செல்வன் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
‘தோழமைக் கட்சிகளுக்கு மதிப்பளித்து அவர்களுகு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இதை நாங்கள் சுமுகமாகத் தீர்க்க விரும்புகிறோம்’ என்று சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.