திருச்சி உறையூரில் பக்தர்களால் கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படும் வெக்காளியம்மன் கோவில், காவல் தெய்வமாக திகழ்கிறது. அம்மனின் அருள் பெறும் நோக்கில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கோயிலில் நடைபெறுகின்றன. அந்த வகையில், கோவில் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும் பூச்சொரிதல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அதிகாலை 5 மணிக்கு பூச்சொரிதல் விழா தொடங்குகிறது. விழாவின் போது, கோயில் நிர்வாகத்தினர் மேளதாளங்கள் முழங்க, பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்துகிறார்கள். தொடர்ந்து, பக்தர்களும் தங்களுடன் கொண்டுவரும் பூக்களை அம்மனுக்கு அர்ப்பணித்து, தங்கள் விருப்பங்களை கூறி வழிபடுகின்றனர்.
விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் போன்ற பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் கோயிலில் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்கள் சங்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து அம்மனுக்கு விதவிதமான பூக்களை கொண்டு வந்து அர்ப்பணிக்கின்றனர்.
இந்த விழாவுக்காக கோயில் நிர்வாகத்தினர் முறையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.