திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற ஏப் 1ம் தேதி தொடங்குகிறத வருகிற 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து நிகழ்ச்சி நிரல் தொடர்பான விளம்பர பேனர்
தென்னூர் மந்தை பகுதியில் தெய்வீக மகா சபா சார்பில் வைக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தாங்கள் அந்த இடத்தில் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறை இன்று தெய்வீக மகா சபா வைத்த பேனரை அகற்றிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தெய்வீக மகாசபா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு தில்லை நகர் ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த தில்லை நகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.