திருச்சி | 📅 02.04.2026
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவர் மற்றும் நடிகர் விஜய், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் அவர் தனது வேட்பு மனுவை வழங்கினார். இதற்காக அவர் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மதியம் 12:30 மணிக்கு நல்ல நேரத்தைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு, அந்த பகுதி முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.