Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

0

சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு தொகுதி எம்எல்ஏ என்றால் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் என அனைத்து மத, ஜாதி மக்களும் வாக்களித்து வெற்றி பெறுபவர் சட்டமன்ற உறுப்பினர்.

சட்டசபையில் இவருடைய மதத்திற்கு தேவையான எல்லா உதவிகளையும் கேட்டுப் பெறுகிறார் மேலும் கோரிக்கைகளும் வைத்து வருகிறார்.

அப்படி என்றால் இவருக்கு ஓட்டுப் போட்ட இந்துக்களும் இஸ்லாமியர்களும் என்ன செய்வது, இவருடைய நோக்கம் மக்களுக்கு பணியாற்றுவது அல்ல இவருடைய சமுதாய மக்களுக்காகவே பணியாற்றுகிறார்.

சமீபத்தில் இவர் இவருடைய சமுதாய மக்கள் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகளை வற்புறுத்துகிறார் என்றும் பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதை அகில இந்திய இந்து மகாசபா வன்மையாக கண்டிக்கிறது.

திருச்சியில் கோட்ட தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஒரு கவுன்சிலரிடம் நேரடியாகவே நீங்கள் இந்து அதுவும் கள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள் நீங்களே அனைத்து பதவியிலும் இருந்தால் (அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியை மறைமுகமாக கூறியுள்ளார்)
எங்களது கிறிஸ்தவர்களும், வெள்ளாளர்களும் என்ன செய்வது என கூறியுள்ளார்.

ஏற்கனவே இவர் மதமாற்றம் பிரச்சினையில் உள்ள ஒரு நபர் பிணையில் வெளியே வரும்பொழுது அவரை வரவேற்று சால்வை அணிவித்து பெரும் சர்ச்சையாக உள்ளது. இந்த மதமாற்றம் கூட்டத்திற்கு பின்னால் பெரும் சக்தியாக இருந்து கொண்டிருக்கிறார். இனிகோ இருதயராஜ். தற்போது லாவண்யா மரணத்தை சிபிஐ விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.இந்த விசாரணையில் இனிகோ இருதயராஜ் அவர்களையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் அப்படி கொண்டு வந்து விசாரணை நடத்தினால் மட்டுமே பல உண்மைகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து விரைவில் சிபிஐ இயக்குனரிடம் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் மனு அளிக்க உள்ளோம்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ்
தான் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து, சட்டசபையில் தனது இயக்கத்தின் தலைவராக பேசி வருகிறார். அவர் தன்னுடைய சமுதாய பாசத்தை ஒருதலைப்பட்சமாக பயன்படுத்துவதை அகில இந்திய இந்து மகாசபா சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்