Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி மாவட்ட செய்திகள் இன்று

0

வெல்டிங் பட்டறை அதிபரிடம் பணம் வழிப்பறி
திருச்சி ஏப் 12 –
திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 42 ).இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஸ்டார் நகர் சந்திப்பு வயர்லெஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கத்திமுனையில் இவரை மிரட்டி ஒரு வாலிபர் பணத்தை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து பாட்ஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் ,ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தருமா என்கிற தர்மசீலன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் டி.வி.எஸ் டோல்கேட் முடுக்குபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்ற வாலிபரிடம் செல்போன் திருடியதாக 16 வயது சிறுவனை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

 

அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியதாக 2 பேர் கைது
2 லாரிகள், 6 யூனிட் மணல் பறிமுதல்திருச்சி ஏப் 12.
திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் சந்திப்பு பகுதியில் சிறப்பு தாசில்தார் ஜெயப்பிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிராவல் மண் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை மறித்தனர்.சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறைகளை மீறி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள், ஏர்போர்ட் போலீசில் புகார் செய்து ஒப்படைத்தனர். புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் பிரபாகரன், தன்ராஜ் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர் .மேலும் சுரேஷ் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 6 யூனிட் கிராவல் மண் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் வெளிமாநில லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்
திருச்சி ஏப் 12 –
திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக சுல்தான் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பீம நகரைச் சேர்ந்த மாரி கண்ணன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறையூரில்
மயங்கி விழுந்து மூதாட்டி சாவு
திருச்சி ஏப் 12 –
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி கௌரி. (வயது 70). இவர் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு அருகே தங்கியிருந்து பிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி செல்ல மறுத்த பிளஸ் 1 மாணவன் திடீர் மாயம் போலீசார் விசாரணை
திருச்சி ஏப் 12 –
திருச்சி பொன்மலைப்பட்டி ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கோகுலகண்ணன் ( வயது 17 ).இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான் .எனக்கு படிக்க விருப்பமில்லை. நான் வேலைக்கு செல்கிறேன் என்று பெற்றோரிடம் அவன் கூறியுள்ளான். ஆனால் பெற்றோர் நீ வேலைக்கு செல்ல வேண்டாம். ஒழுங்காக படி என்று கூறி சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற கோகுலக்கண்ணன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்