முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மீறி, பேரூராட்சி தலைவர், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் உள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி, தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் சார்பில், சின்னவேடி போட்டியிட்டார்.ஆனால், மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, நகர செயலர் உதயகுமார் ஆதரவுடன், அக்கட்சியை சேர்ந்த சாந்தி, தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வெற்றி பெற்றவர்கள், பதவியை ராஜினாமா செய்தபின் தன்னை நேரில் சந்திக்குமாறு, கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்
இந்த பஞ்சாயத்து ஒரு புறமிருக்கும் நிலையில் , தி . மு . க . வில் அக்கட்சியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட கவுன்சிலர்களுக்கான பதவி வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது . அதாவது பேரூராட்சி , நகராட்சிகளின் தலைவர் , துணைத்தலைவர் ஆகிய பதவிகளில் சிலவற்றை தங்கள் கட்சியின் தலித் கவுன்சிலர்களுக்கு தி . மு . க . தலைவர் வழங்கி உத்தரவிட்டாராம் . அதை அந்தந்த பகுதியின் ஆதிக்க சாதி தி . மு . க . நிர்வாகிகள் அமுக்கி , பறித்துவிட்டதாகவும் பஞ்சாயத்து வெடித்துள்ளது . குறிப்பாக கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியின் துணைத்தலைவர் பதவி இப்படி ஆக்கப்பட்டுள்ளதாம் .
இந்த விவகாரம் தி . மு . க . தலைமைக்கு போக , அவர் ‘ வேறெங்கெல்லாம் இப்படி நடந்துள்ளது என்று எனக்கு உடனடியாக லிஸ்ட் வேண்டும் ‘ என்று கேட்டுள்ளார் . தாழ்த்தப்பட்ட சமுதாய கவுன்சிலர்களின் உரிமைகளை பறித்த தன் கட்சியினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர் . விரைவில் நடவடிக்கை பாயலாமாம்.
இது குறித்து, வி.சி., கட்சியினர், தடங்கம் சுப்பிரமணி தரப்பில் நடந்த பேச்சில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பழனியப்பனை சந்தித்து, வி.சி., மாநில நிர்வாகிகள் பேச்சு நடத்தியும் இழுபறி நீடிக்கிறது. அதே நேரம், ‘யார் கூறினாலும், பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை’ என சாந்தி கூறி வருகிறார்.வி.சி., நிர்வாகிகள் கூறுகையில், ‘கட்சித் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும், பதவியை சாந்தி ராஜினாமா செய்யாததற்கு சில தி.மு.க., நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் தான் காரணம். இதனால், ஸ்டாலின் உத்தரவு காற்றில் பறக்கிறது. பேச்சு எனும் பெயரில், தி.மு.க.,வினர் ‘டபுள் கேம்’ ஆடுகின்றனர்’ என்றனர்