டிசம்பர் 22: = திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி அடுத்த முக்கண் பாலம் எனும் இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓம் பரமிரம்ம மாமலை நாத லிங்கேஸ்வரர் சிவாலயம் உள்ளது .இச் சிவாலயத்தில் விசேஷ தினங்களில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பூஜையை முடித்து விட்டுச் சென்ற பூசாரி இன்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் பூஜை சாமான்கள் திருடு போனது தெரியவந்தது. இந்நிலையில் துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினார். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.