சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை அடுத்த மஞ்சள் ஓடைப்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை 0 உரிமம் பெற்று ஆறு அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.அப்போது ஆலை உரிமையாளர் கருப்பசாமி செந்தில் ஆகிய இருவரும் பட்டாசுக்கு தேவையான மருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்ட போது உராய்வின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.7 பேர் படுகாயம்இந்த வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மஞ்சள்ஒடைபட்டியை சேர்ந்த முனியசாமி கண்ணகுடும்பன் பட்டியைச் சேர்ந்த காசி கொம்மிங்காபுரத்தை சேர்ந்த பெருமாள் சரஸ்வதி அய்யம்மாள், விஜயகரிசல்குளத்தை சேர்ந்த செந்தில், கருப்பசாமி உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.2 பேர் உடல் கருகி பலிஇதையடுத்து தகவலறிந்த சாத்தூர் வெம்பக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்கள். சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் செந்தில் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.விருதுநகர் அருகே 5 பேர் பலிவிருதுநகர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் வழிவிடும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.4 பேர் உயிரிழப்புஇந்த நிலையில் இன்றைய தினம் மஞ்சள் ஓடைப்பட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார், காசி உள்ளிட்ட 4 பேர் மரணமடைந்தனர். படுகாயங்களுடன் சிலர் சாத்தூர், கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதுகாப்பு இல்லாத வாழ்க்கைதமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்து என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துகளை தடுக்க உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு துறை சார்ந்த தனி குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளைகண்காணித்து பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது