பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி கிழக்கு கிராமத்தில் கடந்த 30/07/2023 தேதியன்று காலை சுமார் 8:00 மணியளவில் கல்லை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் சட்ட விரோதமாக வண்டல் மண் அள்ளி டிராக்டரில் எடுத்து சென்ற போது ஊர் பொது மக்களால் சிறைப்பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
வண்டல் மண் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை கடந்த 30-07-2023 தேதியன்று காலை சுமார் 11:30 மணியளவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் பின் *ஆறு நாட்களாக* வழக்கு ஏதும் பதியாமல் பேரம் பேசி ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவருக்கு ஆதரவாக 05-08-2023 தேதியன்று சம்பவம் நடந்தது போன்ற ஒரு பொய்யான தகவலை ஏற்படுத்தி அதன் மூலம் வெறும் சாதாரண சட்டப் பிரிவுகளில் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது….