Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

போலி சர்வேயர் பார்த்திபன் கைக்குள் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம்..!!!

0

தமிழகத்தில் உள்ள நில அளவைத் துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி ஸ்ரீரங்கம் வட்டத்தில் பல ஆண்டுகளாக சர்வேயர் என கூறிக் கொண்டு பார்த்திபன், ரமேஷ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் வட்ட அலுவலக நில அளவை பிரிவில் அரசு அலுவலரை போல் அமர்ந்து கொண்டு பட்டா பெயர் மாற்றக் கோப்புகளை கையாளுகின்றனர்.

நில அளவை குறுவட்ட அலுவலர்கள் விக்னேஷ், சரவணன் மற்றும் நிஜம்தன் ஆகியோரின் துணையுடன் கடந்த சில ஆண்டுகளாகவே போலி சர்வேயர் பார்த்திபன் பல்வேறு இடங்களில் கவர்மெண்ட் சர்வேயர் எனக் கூறி கொண்டு கிராம கணக்குகளை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு தனியாகவே நில அளவை செய்து தனிப் பட்டாவிற்கு உட்பிரிவு 8ஏ கோப்புகளை தயார் செய்து கொடுத்து வருகின்றார்.

அதோடு மட்டுமல்லாது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா பெயர் மாற்றம் செய்து தர வேண்டி முத்தரசநல்லூர் மற்றும் கம்பரசம்பேட்டை ஆகிய கிராம பகுதியில் உள்ள பொது மக்கள் முகாம்களில் அளித்த பெரும்பாலான மனுக்கள் போலி சர்வேயர் பார்த்திபன் அளவீடு செய்ததன் அடிப்படையில் முன்னாள் வட்டத்துணை ஆய்வாளர் பிரபு அவர்களின் பரிந்துரை பேரில் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்ச வாங்காமல் சம்பந்தப்பட்ட குறுவட்ட சர்வேயர்கள் பலரும் இரவு பகல் பாராமல் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரின் நேரடி கண்காணிப்பில் பணி செய்து அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நிலையில் போலி சர்வேயர் பார்த்திபன் முறைகேடாக லஞ்சம் வசூல் செய்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலக நில அளவைப் பிரிவுகளில், எக்காரணத்தை கொண்டும் அரசு ஊழியர் அல்லாத எந்த ஒரு தனி நபரையும் பணியமர்த்தக் கூடாது என்றும் அவ்வாறு ஏதேனும் நிகழ்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நில அளவை சார் ஆய்வாளர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடித எண்: ந.க.ய3/13768/2023(நி.அ.) நாள். 26.07.2023 படி நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி I.A.S., அவரகள் ஆணை வழங்கி உள்ளதை மதிக்காமல் ஸ்ரீரங்கம் வட்ட அலுவலகத்தில் போலி சர்வேயர் அலுவலக பணி செய்து வருவது குறித்து விசாரித்த போது, திருச்சி மாவட்ட, நில அளவை உதவி இயக்குனர் நாகமுத்து அவர்கள் முறையாக வட்ட அலுவலகங்களுக்கு சென்று ஆய்வுக்கு செல்லாமலே மெத்தனமாக செயல்பட்டு வருவதால் தான் பல சர்வேயர்கள் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…!!!

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்