Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

நாளிதழ்களின் பி.டி.எஃப் ஷேர் பண்ணும் குரூப்புக்கு ஆப்பு..

0

நாளிதழ்களின் பி.டி.எஃப் ஷேர் பண்ணும் குரூப்புக்கு ஆப்பு.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
29, 2021, : நாளிதழ்களின் பிடிஎஃப் பைல்களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ் அப் குழுக்களை நீக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தற்போது சில வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப்களில் பிரபல நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகளை ஸ்கேன் செய்து அவற்றை பிடிஎஃப் பைல்களாக மாற்றி வாட்ஸ்அப் குரூப்களில் பகிரும் நடைமுறை அதிகமாகி வருகிறது. இதனால் நாளிதழ்களில் வருமானம் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் சட்டவிரோதமாக செயல்படும் வாட்ஸ்அப் குரூப்களால் பத்திரிகை துறைக்கு இழப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.இந்தநிலையில் டெல்லியில் இருந்து வெளிவரும் டைனிக் பாஸ்கர் என்ற இந்தி நாளிதழின் வெளியீட்டாளர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படும் செய்தித்தாள்களை தங்களின் அனுமதி இன்றி பிடிஎஃப் பைல்கலாக மாற்றி சிலர் சட்டவிரோதமாக வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பி, வருவதாகவும் இதனால் தங்கள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.மேலும் தங்கள் வாசகர்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது என்றும், உண்மையில் பணம் கொடுத்து செய்தித்தாள்களை வாங்கிப் படிக்கும் அல்லது இணையத்தில் சந்தா செலுத்தி படிக்கும் வாசகர்களும் இதனால் பாதிக்கப்படுவதால் , நாளிதழ்களை பரப்பிய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா, பதிப்புரிமைச் சட்டம் 1957 மற்றும் வர்த்தக முத்திரைச் சட்டம் 1999 ஆகியவற்றின் படி தனிநபர்கள் நாளிதழ்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக்கூடாது எனவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, டைனிக் பாஸ்கர் நாளிதழை சட்டவிரோதமாக பரப்பிய 85 வாட்ஸ்அப் குழுக்களையும் நீக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டு என்பதால் வாட்ஸ்ஆப் அட்மின்கள் கவனம் செலுத்த வேண்டும் என சட்ட வல்லுநர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.: ,

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்