தமிழ்நாட்டிற்கு அடுத்த வாரம் வர உள்ள பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பல்வேறு இடங்களில் பாஜக சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பாகவும் பிரதமரின் வருகைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சிவகங்கையில் பாஜக, திமுக கொடிகள் அடுத்தடுத்த நடப்பட்ட சம்பவம் வைரலாகி உள்ளது.பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இந்த நிகழ்வில் திறந்து வைக்க இருக்கிறார்.பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அதன்பின் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட இருக்கிறார்.ஈழத் தமிழர் பகுதியில் சீனாவை வெளியேற்ற பைடன்-மோடி கை கோர்க்க வேண்டும்-ஸ்டாலினுக்கு தமிழர்கள் கடிதம்மோடி தமிழ்நாடு திமுகதமிழ்நாட்டில் தங்கும் பிரதமர் மோடி மதுரையில் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்று பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுக்க பாஜக சார்பாக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.மோடி திமுக எதிர்ப்புஇந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையின் இந்த முறை திமுக எதிர்க்காது என்று ஏற்கனவே ஒன்இந்தியா சார்பாகசெய்தி கொடுத்து இருந்தோம். பிரதமர் மோடியின் வருகையை கோ பேக் மோடி என்று இத்தனை நாள் எதிர்த்தோம். ஆனால் இந்த முறை அவர் நலத்திட்டங்களை அறிவிக்க வருகிறார். அதிலும் நம் அழைப்பின் பெயரில் வருகிறார்.கோ பேக் மோடிஇப்போது நாமே அழைத்துவிட்டு அவரை எதிர்க்க முடியாது. அதனால் இப்போது பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்க முடியாது. எனவே இந்த முறை கோ பேக் மோடி டிரெண்ட் எல்லாம் வேண்டாம் என்று தலைமை சார்பாக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வந்தன. இது அரசு தரப்பு அழைப்பு, இப்படி ஒரு அழைப்பு நடக்கும் போது கோ பேக் மோடியை திமுக டிரெண்ட் செய்வது தவறாக இருக்கும்.திமுக கோ பேக் மோடிதேர்தல் பிரச்சாரத்திற்கு கட்சி நிகழ்வாக மோடி வந்தால் அதை எதிர்ப்போம். இதை எதிர்க்க மாட்டோம். என்ன இருந்தாலும் அவர் பிரதமர், என்று திமுக தரப்பு தெரிவிக்கிறதாம். அவரை எதிர்ப்பது தமிழ்நாட்டின் நலத்திட்டங்களை பாதிக்கும். அரசு தரப்பில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. இப்போது அவர் வருகையை எதிர்ப்பது நியாயமாக இருக்காது. அவரின் கொள்கை மீதான எதிர்ப்பு தொடரும் என்று திமுகவினர் கருதுவதாக கூறப்படுகிறது.கனிமொழி மோடிஇதைத்தான் திமுக எம்பி கனிமொழியும் கூறி இருந்தார். நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் வருகிறார். இதற்காக வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் என சொல்லாது. இங்கு நமக்கு திட்டங்களின் தேவை இருக்கு. அரசு, அரசியல் எல்லாம் வேறு, கருத்தியல் வேறுபாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அரசு ரீதியாகவே அழைத்து இருக்கிறோம். அதிமுகவை போல பாஜகவுடன் திமுக கூட்டு வைக்காது என்று கனிமொழி குறிப்பிட்டு இருந்தார்.ஆர்எஸ் பாரதி கோ பேக் மோடிஅதேபோல் திமுக எம்பி ஆர்எஸ் பாரதியும், மோடி எப்போதும் எங்களுக்கு எதிரி இல்லை. இந்துத்துவாதான் எதிரி. அவரை நாங்கள்தான் அழைத்து இருக்கிறோம். அவர் விருந்தினர். அவரை நாங்களே எப்படி எதிர்க்க முடியும். நாங்கள் அதிமுக போல அவர்களுக்கு தலையாட்டினால்தான் தவறு. ஆனால் நாங்கள் தனித்தே செயல்படுவோம் என்று விளக்கம் அளித்தார்.சிவகங்கை கொடிஇந்த நிலையில்தான் சிவகங்கையில் பாஜக, திமுக கொடிகள் அடுத்தடுத்த நடப்பட்ட சம்பவம் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வந்தது. என்ன திமுக பாஜக கொடி அடுத்தடுத்து இருக்கு. என்ன இரண்டு கட்சியும் கூட்டணிக்கு ரெடியாகிவிட்டதா என்று இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதை வைத்து ஆளும் திமுக தரப்பை சிலர் கிண்டலும் செய்து இருந்தனர்.திமுக பாஜக கொடிஇந்த நிலையில் அறிவாலய வட்டாரத்தில் விசாரித்ததில், கொடி எல்லாம் சேர்ந்து நடப்படவில்லை. இது மோடியின் வருகைக்காக நடப்பட்டது இல்லை. சிவகங்கையில் பாஜக சார்பாக வேலுநாச்சியார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்காக பாஜக கொடிகள் சாலையில் நடப்பட்டது. இந்த நிலையில் அதே சிவகங்கையில் மாலையில் திமுக சார்பாக அமைச்சர் கலந்து கொள்ளும் மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.வேலுநாச்சியார் பிறந்த தினம்வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் திமுக மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அதே பாதையில் திமுக கொடி நட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இடம் இல்லாமல் பாஜக கொடிக்கு அருகே திமுக கொடி நடப்பட்டது. மற்றபடி ஒன்றாக சேர்ந்து எல்லாம் கொடி நடவில்லை. இணையத்தில் தவறான தகவல் பரவுகிறது என்று கூறப்படுகிறது.