பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது போராட்டம் நடத்திய திமுக, இப்போது என்ன நிலைப்பாடு எடுக்கும் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படும்.
திமுகவை சேர்ந்த தலைவர்களும் கூட இந்த Go back Modi என்ற ஹேஷடேக்கில் ட்வீட் செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் இதுதான் நடக்கும்.கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி திருவிடந்தயில் ராணுவத் தளவாட கண்காட்சி தொடக்கவிழா மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழாவில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்னை வருகை தந்தார். அப்போது சென்னை முழுக்க திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாகக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது. இதை அப்போது பாஜக, அதிமுக கட்சிகள் கடுமையாக விமர்சித்தனஇந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். இது தொடர்பான அறிவிப்பு வெளியான போதே Go back Modi என்ற ஹேஷ்டேக் மீண்டும் இணையத்தில் டிரெண்டாக தொடங்கியுள்ளது..எதிர்க்கட்சியாக இருந்த போது, பிரதமரின் தமிழக வருகைக்கு எதிராக ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்திய திமுக, இப்போது என்ன நிலைப்பாடு எடுக்கும் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் மோடியின் வருகை குறித்தும் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கு இடையே உள்ள உறவு குறித்தும் பேசியுள்ளார்.
இது குறித்து ஏசியானெட் தமிழுக்கு ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், ‘ஆளுங்கட்சியாக வந்து விட்டோம் என்ற எண்ணமே திமுக தொண்டனுக்கு கிடையாது. எங்கள் கட்சி ஆட்களை எந்த காவல்துறை அதிகாரியும் மதிப்பதில்லை. திமுகவினர் யாரும் காவல் நிலையத்திற்குப் போகக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எம்எல்ஏ அல்லது எம்பி மூலமாகத்தான் போக வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளார். அப்பாவிகளை போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போது அவர்கள் பயப்படுவது வழக்கம். அப்போது அரசியல்வாதிகளைத் தான் மக்கள் அணுகுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சிக்காரர்கள் காவல் நிலையத்திற்குப் போகக்கூடாது என முதல்வர் கூறிவிட்டார். காவல் நிலையத்தில் கட்சிக்காரர்களின் கால் படக்கூடாது என உத்தரவு போட்டுவிட்டார்’ என்றார்.மேலும், பிரதமரின் தமிழக வருகை குறித்தும் அவர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த 2018 பிரதமர் மோடி சென்னை வந்த போது சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் கிண்டி அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகம் வரும்வரையில் வழி நெடுக தமிழர் வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக என பல்வேறு கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் இறங்கின. அப்போது திருவிடந்தயில் செல்ல பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்த நிலையில், கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன.இந்தச் சூழ்நிலையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க, பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், இந்த முறை திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டுமா என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக்கொடி காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம், ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே கருப்புக்கொடி காட்டினால் அது எந்த விதத்தில் நியாயம்தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க அவர்களை நாங்கள் அழைத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அவர் வரவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் எப்படி அவருக்கு கருப்புக்கொடி காட்ட முடியும்? எங்களுக்கு எதிராக அவர் ஏதாவது பேசியிருந்தால் அப்போது நாங்கள் அவரை தவிர்த்திருப்போம். பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியை அல்ல, இந்துத்துவா தான் எதிரி..தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் தான் அதிமுக ஆட்சியில் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினோம். இப்போது நாங்கள் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுகவைப் போல அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாங்கள் தலையாட்டுவதில்லை. திமுக தன்மானத்தோடு நடந்துகொள்கிறது’ என்று ஆர். எஸ் பாரதி கூறினார்.