Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மோடி கேட்டுக் கொண்டதன் பெயரில் மாணவர்கள் வெளியேற ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க சம்மதித்தது

0

மக்கள் உயிருக்கு அஞ்சி பதுங்கு குழிகளில் தங்க வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து தங்கள் உயிரை பாதுகாத்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் எல்லாம் குண்டுவெடிப்பு சத்தமும் துப்பாக்கிச்சூடு சப்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மரண ஓலம் , கரும்புகை மண்டலமாக உக்ரைன் காட்சியளிக்கிறது. இதற்கிடையில் அங்கு படிக்கச் சென்ற வெளிநாட்டு மாணவர்கள் போர்க்களத்தில் சிக்கி தப்பிக்க வழிதேடி உயிருக்கு போராடி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகள் தூதரகங்கள் வாயிலாக தங்கள் நாட்டு குடிமக்களை மீட்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி- ரஷ்யா அதிபரை தொலைபேசி வாயிலாக இந்தியர்களை மீட்க ரஷ்யா உதவி செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள், மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக வெளியேற மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்தவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபரிடம் அங்குள்ள வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ரஷ்யா அறிவித்திருக்கிறது.

தற்காலிகப் போர்நிறுத்தத்தை உக்ரைன் தரப்பும் ஏற்றுக் கொண்டதாக ரஷ்யா கூறியுள்ளது. எனவே உடனடியாக போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு போரை ரஷ்யா நிறுத்தியது. போர் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பாவி மக்கள் வெளியில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனில் சாலைகள் சீர் செய்யப்பட்டு பொது மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்