மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிலத்தில் வழங்கப்பட்ட போலி பட்டாவை ரத்து செய்ய முட்டுக்கட்டை போடுவது திருச்சி மாவட்ட நிர்வாகமா??
போலி பட்டா ரத்து புகார் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன்..!!!!!
மலைக்கோட்டை தாயுமானவர் கோயில்
சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றப்பட்டுள்ளது. இதை உடனடியாக கோவில் பெயருக்கு பட்டா மாற்ற இந்து அறநிலைத்துறை கோரிக்கை விடுத்தும் அதை பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் செயல்படும் திருச்சி மாவட்ட நிர்வாகம்.
நமது T நியூஸ் செய்தி எதிரொலியாக மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்க மூளையாக செயல்பட்ட கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் அதிரடியாக நடவடிக்கை எடுக்காமல் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். “இடமாற்றம் தீர்வல்ல அவர் மீது நடவடிக்கை
எடுப்பது தீர்வாகும்”.
ஆனால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் திருச்சி கோட்டாட்சியருக்கும் கொடுத்த புகார் மனு மீது கடந்த ஓராண்டுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருவது ஏன்…? என ஆன்மீகவாதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்..