சமீபத்தில் தமிழ் சினிமாவில் பெரியளவில் சர்ச்சையை உருவாக்கிய படம் ஜெய் பீம். ஒரே ஒரு கேலெண்டரில் வன்னிய சமுதாயத்தினை இழிவு படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது என்று வன்னியர் சமுகத்தினர் புகார் அளித்து வந்தனர்.
மேலும் வன்னியர்களை மோசமாக சித்தரித்ததால் 5 கோடி நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்றும் கூறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நெட்டிசன்கள் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் ஆறுதல் அளித்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.
அந்தவகையில் பாஜக கட்சியை சேர்ந்த எச்.ராஜாவின் புகைப்படத்தை கேலெண்டரில் இருப்பதுபோல் பதிவிட்டனர். இதற்கு என் புகைப்படத்தை பயன்படுத்தியதால் எனக்கும் 5 கோடி நஷ்டயீடு வழங்க வேண்டும் என்கிற மீம்ஸ் வைரலாகி வருகிறது.