Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

படுபாதக செயலுக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்…?

0

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் இன்று வெறும் வாசகம் மட்டும்தான் திருச்சி மாநகராட்சி கடைப்பிடித்து வருகிறது கோடைகலத்தில்  மக்களுக்கு நிழல் தரும் மரங்களை வெட்டுவது குற்றச் செயலாகவே பார்க்கப்பட வேண்டியது

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட செங்குளம் கிராமம், பாலக்கரை, பழைய கோவில் தேவாலய சுற்று சுவரை ஒட்டிய சாலையோர பகுதிகளில் நிழல் தரும் நன்கு வளர்ந்துள்ள சுமார் பத்திற்கும் மேற்ப்பட்ட மரங்களை பழைய கோவில் நிர்வாகம் கடந்த 23.03.2022ந் தேதி காலை சுமார் ஏழு நபர்களுடன் திருச்சி மாவட்ட நிர்வாகத்திடமோ, மாநகராட்சி நிர்வாகத்திடமோ எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வெட்டி வீழ்த்தியுள்ளனர். மேலும் இதற்கான காரணங்கள் தொடர்பாக விசாரிக்கும் பொழுது நிழலுக்காக அப்பகுதி மக்கள் வாகனங்களை நிறுத்திகொள்வதால் மரங்களை வெட்டியுள்ளார்களாம். மேலும் குறைந்த பட்சம் மரங்களின் கிளைகளை கழித்தால் கூட ஏற்றுகொள்ளலாம். ஆனால் மேற்படி மரங்களை முற்றிலுமாக வெட்டியுள்ளது வேதனையளிக்கிறது. மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் திருச்சி மாநகராட்சிக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கூறப்படுகிறது.

எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களும் முறையான விசாரணைக்கு பிறகு மேற்படி நன்கு வளர்ந்துள்ள நிழல் தரும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியவர்கள் மீதும் இந்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர் இது போன்ற தவறுகள் வேறு எங்கும் நடைபெறக் கூடாது என்று எதிர்பார்க்கவும் செய்கிறது. இத்தனை காலமாக இருந்து வந்த மரத்தை வெட்டுவதற்கு இப்பொழுது இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் இவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் பல உண்மைகள் வெளியே வர காத்திருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்