இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை முறைமான UPI-ஐ இஸ்ரேலில் பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் இந்திய பிரதமர் Narendra Modi மற்றும் இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu முன்னிலையில் கையெழுத்தானது.
இதன் மூலம் இருநாடுகளுக்கிடையேயான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு புதிய நிலைக்கு உயர்ந்துள்ளது.
மேலும், குஜராத்தில் தேசிய கடற்சார் பாரம்பரிய வளாகம் அமைக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கலாச்சாரம், அறிவியல், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியா–இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.