திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் அகிலா இவர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று விடியற்காலை வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து புறப்பட்டு வந்த அகிலா காந்தி மார்க்கெட்டில் காய்கறி சாமான்களை வாங்கிக்கொண்டு எடமலைப்பட்டி புதூர் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்றபோது அவர் அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி திடீரென நகையை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசில் அகிலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.