பலத்த பாதுகாப்புக்கு இடையில் திருச்சியில்
இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்பதற்கான பிரசார பயணம் கடந்த 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. இந்த பிரசார பயணக்குழுவினர் திங்கள்கிழமை திருச்சிக்கு வந்தது. இதையொட்டி திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மேலும் பேசியது :
திருச்சி தாயுமானவர்,ராமானுஜர், வவேசு ஐயர் உள்ளிட்டோர் வாழ்ந்த ஆன்மிக பூமி. பெரியார் பூமி அல்ல. இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் கடந்த 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி, ஜூலை 31ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது. இராம. கோபாலன் அவர்கள் தமிழகம் முழுவதும் சென்று இந்துக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினார். பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்துக்களுக்காக பாடுபட்டுள்ளார். குறிப்பாக கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்கள் கன்னிமேரி மற்றும் காயிதே மில்லத் மாவட்டமாக மாறவிருந்ததை தடுத்து நிறுத்தியவர் நமது கோபாலன்ஜி தான். இந்து கோயில்கள் அரசிடம் இருப்பதால் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அமைச்சர் சேகர்பாபு கோவில் நிலங்களை மீட்டு விட்டதாக கூறுகிறார். யாரிடம் இருந்து நிலங்களை மீட்டார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. எங்களிடம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களின் பட்டியல் உள்ளது. அதை தருகிறோம். மீட்டுக்கொடுக்க அவர் தயாரா? . ஏராளமான கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் சிறுபான்மையினத்தவரின் சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடந்து வருவது திமுக, நாத்திக பிரிவினை வாத அரசு நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், தேச விரோதி ஸ்டேன்ஸ்சாமிக்கு, அமைச்சர் ஒருவர் அஞ்சலி செலுத்துகிறார். பாரத பிரதமரை கொலை செய்த குற்றவாளி பேரறிவாளனை முதல் அமைச்சர் மு க. ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்கிறார். தி.மு.க.வினருக்கு ஆலோசனை கூறும் பாதிரியார் ஜெகத்கஸ்பார் முஸ்லிம்கள் கூட்டத்தில் தனிநாடு கேட்டு பெறுங்கள் என்று கூறுகிறார். பல தேச விரோதிகள் அரசுடன் தொடர்பில் உள்ளனர். சட்டவிரோதமாக தமிழகத்தில் சர்ச்சுகள், மசூதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு துணைபோகும் ஆணையர் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றி வருகிறார். அவரை மாற்ற வேண்டும்.
இனியம் இந்துக்கள் பொறுமை காக்கக் கூடாது. நம து உரிமையை நிலைநாட்ட அற வழியில்போராட வேண்டும். அவற்றை வலியுறுத்தும் விதமாகவே இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்து முன்னணியை நோக்கி இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். வருகிற காலம் இந்துக்களின் காலமாகும். தி.மு.க. அரசு இந்துக்களின் மன நிலையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தவாறு செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு வருகிற 2024}ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம். மேலும், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், மதமாற்றத்தை கைவிட வேண்டும். இல்லையேல், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை இணைத்து வரும் 2031 ஆம் ஆண்டு அகண்டபாரதத்தை உருவாக்குவோம் என்றார் அவர்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பொன்னையா, ராஜேஷ், முருகானந்தம், கோட்ட செயலாளர் போஜராஜன், மாவட்ட செயலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் உள்பட பலர் பேசினர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் சிவனேஸ்வரி கடவுள் வாழ்த்து பாடினார். இந்து முன்னணி கோ}அபிஷேகபுரம் மண்டல பொதுச்செயலாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார். மாநிலத்தலைவருக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் இந்துமுன்னணி பிரிவு அணிகள் சார்பில் நினைவுப்பரிசுகள்,செங்கோல், வீரவேல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதற்கு இடையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தார் உறையூர் காவல் ஆய்வாளர் மணி ராஜா அவர்கள் கால் இடறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்