சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.மத்திய உள்துறை அமைச்சக அறிவுரைப்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள், டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டன.
சில தினங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.ஒமைக்ரான் தொற்று பரவல், சமூக தொற்றாகவும் மாறியுள்ளது. ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், முதல்வர் நேற்று பங்கேற்ற விழாக்களில் கூட, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் பட வில்லை. பெரும்பாலானோர் பெயரளவுக்கே முக கவசம் அணிந்திருந்தனர். இதனால், கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடு களை விதிக்கும்படி, மருத்துவ நிபுணர்கள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.அதேநேரத்தில், ஊரடங்கு நீட்டிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளதால், அதை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பும், புதிய கட்டுப்பாடுகளும் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.