Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி கேகே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் திருட்டு.

0

கேகே நகரில் துணிகரம்.

வீட்டின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு.மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

கேகேநகர் மார்ச் 4- திருச்சி கே கே நகர் 5வது மெயின் ரோடு, ரெங்கநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மாலதி (வயது 52) சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கணவருடன் தஞ்சாவூர் சென்று விட்டார்.
இந்நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.பிறகு அறையின் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 1/2 பவுன் நகை மற்றும் ரூ 90 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து மாலதி கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாலதி வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்