Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை காட்டுவதற்கு ஏன் நீங்களும் உங்கள் அரசும் மறைக்கிறீர்கள் ?…

0

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால் சட்டமசோதாவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி அதை கவர்னர் திருப்பி அனுப்பினார்.

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘நீட்’ தேர்வு விலக்கு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் பின்னர் கட்சிகளின் நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, ‘நீட்’ தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை அளிப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, ‘பிப்ரவரி 8 ஆம் தேதி சிறப்பு சட்டபேரவை கூட்டம் நடைபெறும் என்றும், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வண்ணம் இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், இக்கூட்டம் காலை 10 மணியளவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டுகாலப் போராட்டத்தின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்ட கல்விக் கதவுகளை மூடுவதற்கான அத்தனை முயற்சிகளும் வெவ்வேறும் வடிவங்களில் வருகின்றன. அதில் நீட் தேர்வும் ஒன்று. எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு #NEET-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்! என தெரிவித்திருந்தார்.
முதல்வரின் அந்த ட்வீட்டுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் பாஜகவை சேர்ந்த குஷ்பு. ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை தைரியமாக காட்டினால் பாராட்டுக்குரியவராக இருப்பீர்கள். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை காட்டுவதற்கு ஏன் நீங்களும் உங்கள் அரசும் மறைக்கிறீர்கள் ? உலகிற்கு அந்த கோப்புகளை காட்ட எது உங்களை தடுக்கிறது ? என சரமாரி கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்