Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அரசு அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு..!!!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசுத் தொகை ரூ.1 கோடியே 36 லட்சம் நிதி திட்டப்பணிகளுக்கு பயன் படுத்தப்படாமல், வேறு தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும், இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த நிதி முறைகேடு குறித்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறைக்கு மாற்றப்பட்டது.

திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் கனி, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் தற்போதைய வட்டார வளர்ச்சி அலுவலருமான முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்