திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது திருச்சி தாராநல்லூர் வீரமா நகரை சேர்ந்த கீர்த்திவாசன் (வயது 24) மணிகண்டன் (வயது 24)அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சிவ கண்டன் (வயது 26) இபி ரோடு பகுதியை சேர்ந்த புலிதேவன் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதில் புலித்தேவர் மட்டும் தப்பி ஓடியது தெரிய வந்தது.மேலும் இவரிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது ஐந்து பேர் சேர்ந்து ஏதோ திருட்டு சம்பவத்தில் ஈடுபட.திட்டமிட்டு கொண்டிருந்தனர் என தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, இரும்பு ராடு போன்றவை கைப்பற்றினர். இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் ரவுடி பட்டியலில் இருப்பது தெரிய வந்தது.தப்பி ஓடிய புலித்தேவனை போலீசார் தேடி வருகின்றனர்.