தி.மு.க. பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு
என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். பொய் வழக்கு போட்டு அடக்கி விடலாம் என்று நினைத்தால் பூனை பகல் கனவு கண்டதுபோல அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. பொய் வழக்குப் போட்டு கழகத்தை அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது சாத்தியமில்லை. வழக்குகள் இருப்பவர்கள் மட்டுமே திமுகவில் இருக்க முடியும் ஸ்டாலினே கூறுகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சிறந்த தலைமை தேவைப்படுகிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்:-
அது தவறான கருத்து 1996ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா தலைமையில் வழுவான தலைமை இருந்தது. அப்போதும் கருணாநிதி வழக்கு போட்டார். தற்போது இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இருவரும் சிறப்பாக கட்சியை வழிநடத்தி வருகின்றனர். அரசியலில் வெற்றி தோல்வி என்பது நாணயத்தின் இருபக்கம் போன்றது. சட்டமன்றத் தேர்தலில் 3% வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது.
கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் சகோதரர் ராஜாவை கூட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். என்றார்.