Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சிபிசிஐடி விசாரணைக்கும் பரிந்துரைக்க வேண்டும்

0

போராட்டத்தை நிறுத்துவதற்காக எங்களிடம் பொய் சொன்ன போலீசார் என்று குற்றச்சாட்டு

மாணவி இறந்த சம்பவம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, நொச்சி வயல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி சாந்தி.
இவர் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பின மாவட்ட தலைவர் ஐயப்பன் ,பொதுச் செயலாளர் சங்கர் ஆகியோருடன், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பது;
எனது மூன்றாவது மகள் வித்யாலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி பெல் குடியிருப்பு பகுதியில், மூன்று இளைஞர்கள் சேர்ந்து எனது மகளிடம் தகராறு செய்து அவரது வாயில் வலுக்கட்டாயமாக குளிர்பானத்தில் விஷத்தை கலந்து ஊற்றி கொலை செய்து விட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுநாள்வரை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. குற்றவாளிகளை கைது செய்தால்தான், மகளின் உடலை வாங்குவோம் என்று எனது குடும்பத்தாரும் உறவினர்களும் போராட்டம் நடத்தினோம். அப்போது காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விட்டதாகவும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் நிவாரணத் தொகை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தனர். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று இறுதிச் சடங்குகள் செய்தோம்.
ஆனால், எனது மகள் தற்கொலை செய்தததாகவும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக கூறி சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இறக்கும் முன்னர், சிகிச்சையில் இருந்தபோது எனது மகள், நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே அதன்படி, உண்மை நிலையை ஆராய்ந்து, எனது மகள் இறப்பு தொடர்பான வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து, தொடர்புடையவர்களை மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். மேலும் சிபிசிஐடி விசாரணைக்கும் பரிந்துரைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்