பத்து மாதம் கழித்து இந்த அரசுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால், அறிவிப்பு அரசு என்று கூற வேண்டும்.. காரணம், மத்திய அரசு திட்டங்களை எல்லாம் பெயர் மாற்றி, அறிவிப்பு அரசாக இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.நாமக்கல் அடுத்துள்ள கே. புதுப்பாளையம் கிராமத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ பாமா ருக்மணி சமேத நந்த கோபால சுவாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதில் பங்கேற்ற அண்ணாமலை பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, திமுக அரசு கடந்த 10 மாதங்களில், “அறிவிப்பு அரசு” என்ற பெயரை மட்டுமே எடுத்துள்ளது… தமிழகத்தில் புதிதாக 5 பதிவு மாவட்டங்கள்.. திமுக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!பிரதர் மோடிமத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் புதிய பெயரை சூட்டி, தங்களுடைய திட்டம் போல காட்டிக் கொள்கிறது.. ரஷ்யா- – உக்ரைன் போரில், 1,866 தமிழக மாணவ – மாணவியர், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர்…. பிரதமரின் சீரிய முயற்சியால் மட்டுமே, பாதுகாப்பாக அவர்களை மீட்க முடிந்தது. ஆனால், தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து, இவங்களே மீட்டது போல் கூறி வருகின்றனர்.
ஏற்புடையதல்ல.மாணவர்கள்டெல்லியில் இருந்து வேண்டுமானால் மாணவர்களை இவர்கள் கூட்டி வரலாம்.. ஆனால், உக்ரைனில் இருந்து அழைத்து வந்தது மத்திய அரசுதான்.. தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து இங்கிருந்து டெல்லி சென்று 3 நாள் தங்கிவிட்டு நாங்கள் தமிழக மாணவர்களை மீட்டெடுத்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் எங்களின் முயற்சியால் தான் தமிழகத்திற்கு அனைத்து மாணவர்களும் பத்திரமாக வந்து சேர்ந்ததாக அறிக்கையில் கூறியுள்ளார்.பழமொழிஇது எப்படி இருக்கிறது என்றால்? எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வாங்க.. “‘நான் அரிசி கொண்டு வர்றேன். நீ உம்மி கொண்டு வா’ இரண்டையும் சேர்த்து கொள்வோம், அதை புடைப்போம், பிறகு அதை சமைத்து சாப்பிடுவோம்… அதனால், நாங்க கொண்டு வந்தது அரிசி… நீங்கள் கொண்டு வந்தது உமி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தான் “அறிவிப்பு அரசு” என்கிறோம்.ஐமு கூட்டணிமத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, 2009ல் இலங்கையில் இன படுகொலைகள் நடந்தன… அங்கு போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள், 2ஜி அலைக்கற்றை, நிலக்கரி போன்றவற்றில் ஊழல் செய்தனர்… ஆனால், 13 வருடங்களுக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் உலகத் தமிழர்கள் நலம் குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்காக, 60 ஆயிரம் வீடுகளை, மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.கர்நாடகாஇலங்கை தமிழர்களுக்காக, பிரதமர் மோடி அக்கறையுடன் செயல்படுகிறார்… மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடகா காங்கிரஸுடன் தமிழக காங்கிரஸ், கள்ளத்தொடர்பு வைத்துள்ளது. மேகதாது அணைக்காக, கர்நாடகா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகுமார், சித்தராமையா பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இதற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் யாருமே கண்டன குரலும் எழுப்பவில்லை. கூட்டணியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவிக்கவில்லை… இதையெல்லாம் தாண்டி, தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராகி விட்டார்”