திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கன்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்குகிறார்
போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும் தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மேற்கண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் 600 மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்