திருச்சியில் உள்ள தருமபுரம் ஆதீன சொத்தில் போலி பட்டா…
தருமபுரம் ஆதீன சொத்தில் போலி பட்டா... இந்து அமைப்புகள் கண்டனம்....
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை மீறி தருமபுரம் ஆதீன சொத்தில் போலியான உட்பிரிவு 8A கோப்பு எண் படி பிரபல குழந்தை நல மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி பெயரில் பட்டா பெயர் மாற்றம்….!!!
இது தொடர்பாக கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுக்கபட்டு முதற்கட்ட விசாரணை முடிந்து, மேல்நடவடிக்கை எடுக்க நில அளவைத்துறை அனுமதி வழங்கியுள்ளது..!!!
தமிழகம் முழுவதும் சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட தருமபுரம் ஆதீனம், மயிலாடுதுறை மாவட்டத்திணை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்து தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
திருச்சி தில்லைநகரில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சொத்தில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவு ஆவணங்களைக் கொண்டு எந்தவித பட்டா மாற்றம் செய்யக் கூடாது என திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன குருமகா சன்னிதானம் அவர்களால் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கும் பட்டா பெயர் மாற்ற ஆட்சேபனை மனு பல முறை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சி மேற்கு வட்டம், தாமலவரூபயம் கிராமம், உறையூர் சாலை ரோட்டில் அமைந்துள்ள நகரளவை வார்டு : G , பிளாக் : 14, நகரளவை எண் : 89 கட்டுப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்து தொடர்பாக வருவாய் துறை ஆவணங்கள் அனைத்தும் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக தருமபுரம் ஆதீனம் பெயரில் உள்ள நிலையில் திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேல் மற்றும் கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாரும் கூட்டு சேர்ந்து பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கி கொன்டு முறைகேடான வழியில் டவுன் சர்வேயர் கார்த்திக் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் ஆகியோரின் துணையோடு தருமபுரம் ஆதீனம் நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியுள்ள விவகாரம் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
திருச்சி மாவட்ட முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பழனிகுமார் அவர்களால் கடந்த 2021-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது எனவும், ஆதீன நிலத்தின் அருகில் செல்லும் நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியும் உத்தரவு வழங்கியிருந்தார்.
இந்த முறைகேடு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் விரிவான விசாரணை செய்து தருமபுரம் ஆதீன நிலத்தில் வழங்கப்பட்ட போலி பட்டாவை ரத்து செய்ய ஆன்மீகவாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.