சென்னை: பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், கோழைகள்தான் இதை செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரான குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட், தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது..!
பெரியாருக்கு முன்னும் பின்னும் நிறைய தலைவர்கள் தமிழகத்தில் பிறந்தார்கள்.. இறந்தார்கள்… ஆனால் மதவாத சக்திகள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் பெரியாரின் சிலைகளாகவே இருந்து வருகின்றன.இன்னும் இவர்கள் பெரியாரையே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம், பெரியாரின் கருத்தியல் வேர் பிடித்து தமிழகத்தில் ஆழமாக நிற்கிறது என்பதுதான்.பெரியார் இங்கு இல்லையென்றால், அவர் சிலை மீதே காவி சாயம் பூசும் உரிமைகூட பூசியவர்களுக்குக் கிடைத்திருக்காது என்பதே நிதர்சன உண்மை.. ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளை பற்றியே அதிகம் பேசுவார்கள், சிந்திப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில், பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்… இப்படிப்பட்ட செயல்களை அடிக்கடி செய்து, மறந்து போன பெரியாரையும் நம் மக்களுக்கு நினைவு படுத்தி கொண்டேயும் இருக்கிறார்கள்,அப்படித்தான், நேற்றைய தினம் சம்பவம் நடந்துள்ளது.. தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை தலைதூக்கினாலும், அதில் இருந்து திசை திருப்ப இந்துத்துவா கையாளும் ஆயுதம்தான் பெரியார் சிலை விவகாரம்… பிரச்சனைகளை களைய முடியாதவர்கள், அதனை பூசி மொழுகி, குறுக்கு வழியில் இதுபோன்ற யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடந்தும் வருகிறது.. அதுதான் இப்போதும் நடந்துள்ளது..அப்படித்தான், நேற்றைய தினம் சம்பவம் நடந்துள்ளது.. தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை தலைதூக்கினாலும், அதில் இருந்து திசை திருப்ப இந்துத்துவா கையாளும் ஆயுதம்தான் பெரியார் சிலை விவகாரம்… பிரச்சனைகளை களைய முடியாதவர்கள், அதனை பூசி மொழுகி, குறுக்கு வழியில் இதுபோன்ற யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடந்தும் வருகிறது.. அதுதான் இப்போதும் நடந்துள்ளது..இப்போது அவர் பாஜகவின் தேசிய செயற்குழு – சிறப்பு அழைப்பாளராக இருந்தாலும் சரி, பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால், குஷ்பு தன் ஆதங்கத்தை மறக்காமல் தெரிவிப்பது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.. மணியம்மையாக இவர் ஒரு படத்தில் நடித்தவர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திராவிட சித்தாந்தத்தை பற்றி குஷ்பு அறிந்து வைத்துள்ளதும், தொடர்ந்து தன்னுடைய துணிச்சலில் உறுதியாக இருப்பதும், பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்காக கொந்தளித்து கண்டிப்பதும், மகிழ்ச்சிக்குரிய செயலாகும் என்பது மட்டுமல்ல, இதை பாஜகவும் கவனிக்கவே செய்யும் என்பதையும் மறுப்பதற்கில்லை!