Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து

0

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து
தட்டிக் கேட்ட காளை உரிமையாளரை அரிவாளால் வெட்டி

தப்பியோட்டம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் கீழ ஈச்சம்பட்டி கிராமத்தில்
வசிக்கும் விவசாயி ஜான் என்பவருக்கு சொந்தமான நான்கு ஜல்லிக்கட்டு
காளைகளை வளர்த்து வருகிறார். செவ்வாய்கிழமை காலை ஜல்லிக்கட்டு
காளை திமிலில் ஈட்டியால் குத்தி ரத்தம் வழிகிறதென அப்பகுதி மக்கள்
கூறியுள்ளனர். உடனே அவரது வீட்டின் தோட்டத்து பகுதியில் சென்று
பார்த்த போது ஜல்லிக்கட்டு காளை திமிலில் ஈட்டி பாய்ந்திருப்பதனைக்
கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனது காளையினை ஈட்டியால் குத்திய அடையாளம் தெரியாத நபரை
ஆத்திரத்தில் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார் ஜான் தம்பி ஜான்சன்.
கஞ்சா போதையிலிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன்
சந்தோஷ் என்ற 29 வயதான இளைஞர், ஜான்சன் என்ற இளைஞரை
தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.
படுகாயமடைந்த ஜான்சன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே
வேளையில் ஈட்டியால் குத்தியதில் காயமடைந்த ஜல்லிக்கட்டு
காளைக்கு அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில்
மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்